மருத்துவ கல்லூரிக்கான அங்கீகாரம் ரத்து கண்டித்து இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்

சென்னை: மருத்துவ கல்லூரிக்கான அங்கீகாரம் ரத்தைக் கண்டித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் கல்லூரி வாசல் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி விஸ்வநாதன் அரசு மருத்துவ கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆகிய 3 கல்லூரிகளில் குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்றாததால் அந்த கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை திரும்ப பெற முடிவு செய்து இளங்கலை மருத்துவ கல்வி வாரியம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. பயோமெட்ரிக் வருகை பதிவில் குறைபாடு, கண்காணிப்பு கேமராக்கள் திருப்திகரமாக இல்லாதது ஆகியவற்றை சுட்டிக்காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் மருத்துவ கல்லூரிக்கான அங்கீகாரம் ரத்தைக் கண்டித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் கல்லூரி வாசல் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு செல்வராஜ் எம்.பி. தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது, மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்ததை எதிர்த்தும், ஒன்றிய அரசை கண்டித்தும் அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

The post மருத்துவ கல்லூரிக்கான அங்கீகாரம் ரத்து கண்டித்து இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: