பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பாஜக எம்பியை கைது செய்யுங்கள்: பாபா ராம்தேவ் ஆவேசம்

பில்வாரா: பாஜக எம்பி பிரிஜ் புஷண் சிங்கை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனத் தெரிவித்து டெல்லியில் போராடும் மல்யுத்த வீராங்கனைக்களுக்கு யோகா குரு பாபா ராம்தேவ் ஆதரவு தெரிவித்தார். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, அவரை கைது செய்ய வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதமாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மல்யுத்த வீரர்களின் போராட்டத்துக்கு திரளும் பல்வேறு தரப்பு மக்களின் ஆதரவு நாளுக்குநாள் பெருகி வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், பில்வாராவில் நடைபெறும் 3 நாள் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க வருகைத் தந்த யோகாகுரு பாபா ராம்தேவ் நிருபர்களிடம் கூறுகையில், ‘பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் வெட்கக்கேடானது. இத்தகைய நபர்களை விரைவாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். நான் எப்போதும் அரசியலில் இணையமாட்டேன். பிரதமர் மோடி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோா் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகின்றனர். எனக்கு யாருடனும் பகைமை இல்லை’ என்றார்.

The post பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பாஜக எம்பியை கைது செய்யுங்கள்: பாபா ராம்தேவ் ஆவேசம் appeared first on Dinakaran.

Related Stories: