சேலம் சிறையில் மேலும் ஒரு கைதி ஆசனவாயில் பதுக்கிய செல்போன் மீட்பு

சேலம்: சேலம் மத்திய சிறையில் ஆயிரத்திற்கும் வசதி குறைந்த சிறு வயது கைதிகளை வாடகைக்கு அமர்த்தி ஆசன வாயில் செல்போனை பதுக்க வைத்து வசதி படைத்த கைதிகள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன் குமரகுரு என்ற கைதி, ஆசனவாயில் பதுக்கி வைத்திருந்த செல்போனை அதிகாரிகள் மீட்டனர். விசாரணையில் 10க்கும் மேற்பட்டவர்கள் இப்படி செல்போனை பதுக்கும் வாடகை கைதிகளா இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் நேற்று சிறையில் 20வது நம்பர் அறையில் நாமக்கல்லை சேர்ந்த பிரவீன் (22) என்ற கைதி நடக்க முடியாமல் பம்மிக்கொண்டிருந்தார். சந்தேகமடைந்த சிறை காவலர்கள் அவரை கழிவறைக்கு தூக்கி சென்று ஒரு மணி நேரம் போராடி ஆசனவாயில், கவரில் சுற்றி வைத்திருந்த செல்போன், பேட்டரி மற்றும் சிம்மை மீட்டனர்.

The post சேலம் சிறையில் மேலும் ஒரு கைதி ஆசனவாயில் பதுக்கிய செல்போன் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: