பெட்ரோல் பங்கில் ரூ2000 நோட்டை வாங்காததால் போலீசில் புகார்

புதுடெல்லி: 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் டெபாசிட் செய்யவோ அல்லது மாற்றிக்கொள்வதற்கு வருகிற செப்டம்பர் 30ம் தேதி வரை ரிசர்வ் வங்கி அவகாசம் வழங்கியுள்ளது. இந்நிலையில் டெல்லியின் சவுத் எக்ஸ்டென்சன் பகுதி-1 இயங்கி வரும் பெட்ரோல் பங்கில் ஒருவர் தனது இருசக்கர வாகனத்துக்கு ரூ400க்கு பெட்ரோல் போட்டுள்ளார். இதற்காக அவர் 2000 ரூபாய் நோட்டை கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் பெட்ரோல் பங்க் ஊழியர் இதனை வாங்க மறுத்துவிட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்தது குறித்து பாதிக்கப்பட்டவர் பெட்ரோல் பங்க் ஊழியர் மீது கொட்லா காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெட்ரோல் பங்கில் ரூ2000 நோட்டை வாங்காததால் போலீசில் புகார் appeared first on Dinakaran.

Related Stories: