ராஜஸ்தான், ஜார்க்கண்ட்டில் கனமழைக்கு 25 பேர் பலி

ராஞ்சி: ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் இரண்டு நாட்களாக பெய்த மழை காரணமாக இதுவரை 25 பேர் உயிரிழந்து விட்டனர். ராஜஸ்தானில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. மழையினால் ஏற்பட்ட சம்பவங்களில் இரண்டு நாட்களில் 13 பேர் பலியாகினர். டோங்கில் 10 உயிரிழப்புக்களும், ஆல்வார் மற்றும் ஜெய்ப்பூரில் தலா ஒரு உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.

இதேபோல் ஜார்கண்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது, பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து மின்இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்னல் தாக்கியதில் 12 பேர் உயிரிழந்து விட்டனர். வியாழனன்று மின்னல் தாக்கியதில் 7 பேர் பலியான நிலையில், நேற்று முன்தினம் மேலும் 5 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு தலா ரூ4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

The post ராஜஸ்தான், ஜார்க்கண்ட்டில் கனமழைக்கு 25 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: