மும்பை: சிவசேனா எம்பி கஜனான் கிர்திகார், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தங்களை மாற்றாந்தாய் மனப்போக்குடன் நடத்துவதாக குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த உத்தவ் தாக்கரே ஆதரவு சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கூறுகையில், ‘‘சிவசேனாவை ஒழித்துக்கட்டுவதற்கு பாஜ முயற்சித்ததால் தான் சிவசேனா விலகியது. பாஜ முதலை அல்லது மலைப்பாம்பு போன்றது. அவர்களுடன் யார் சென்றாலும் விழுங்கப்படுகிறார்கள். தற்போது சிவசேனா தலைமைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த சிவசேனா எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள், இந்த முதலையிடம் இருந்து தன்னை தூர விலக்கிக்கொண்ட உத்தவ் தாக்கரேவின் நிலைப்பாடு சரியானது என்பதை உணர்ந்து கொள்வார்கள்’’ என்றார்.
The post பாஜ ஒரு மலைப்பாம்பு: சஞ்சய் ராவத் விமர்சனம் appeared first on Dinakaran.