அரிகொம்பன் யானை அருகே யாரும் செல்ல வேண்டாம்: புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க வேண்டாம்.! தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா அறிவுறுத்தல்

தேனி: அரிகொம்பன் யானை அருகே யாரும் செல்ல வேண்டாம் என்று தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா அறிவுறுத்தியுள்ளார். அரிசி தெம்பன் யானை நேற்று முன் தினம் நள்ளிரவு கேரள மாநிலம் குமுளி ரோசாப்பூ கண்டத்தில் நுழைந்தது, கேரள வனத்துறையின் பொதுமக்களும் பட்டாசு வெடித்து பெரியாறு புலிகள் சரணலாய பகுதிக்கு மீண்டும் விரட்டி அடித்து வைத்தனர். இதனை அடுத்து அரிசி கொம்பன் யானை நேற்று பிற்பகல் கம்பம் குமுளி மலை சாலை வழியாக கடந்து தமிழக பகுதியான லோயர் பகுதி வனபகுதிக்குள் நுழைந்து உள்ளது. அரிசி கொம்பன் யானை தமிழக பகுதியில் நுழைந்ததை அடுத்து தமிழக கேரள மாநில இணைப்பு சாலையன குமுளி மலை சாலையில் வகான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. லோயர் கேம் வைரவனார் வாய்க்கால் பகுதியில் முகமிட்டுள்ளதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து தமிழக வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.

அரிசிக் கொம்பனை பிடிக்க, கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. அரிசி கொம்பன் உள்ள பகுதியில் வனத்துறை காவல்துறை பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா வெளியிட்டுள்ள அறிக்கையில், “யானை செல்லும் பாதையில் எந்தவித இடையூறும் செய்ய வேண்டாம். யானையை புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். யானை பிடிக்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்ட பின்னர் 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்படும். அரிசிக் கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யானையை வனப்பகுதிக்குள் விடும்வரை பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். யானையை பிடிக்க 2 கும்கி யானைகளை வரவழைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அரிகொம்பன் யானை அருகே யாரும் செல்ல வேண்டாம்: புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க வேண்டாம்.! தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: