விவசாய பணிக்கு ஆட்கள் பற்றாக்குறையால் 100 நாள் வேலை தொழிலாளர்களை விவசாய பணிக்கு அனுப்ப வேண்டும்

*3ம் நாள் ஜமாபந்தியில் கோரிக்கை மனு

அரக்கோணம்: விவசாய பணிக்கு ஆட்கள் பற்றாக்குறையால் 100 நாள் வேலை தொழிலாளர்களை விவசாய பணிக்கு அனுப்ப வேண்டும் என 3ம் நாள் ஜமாபந்தியில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.அரக்கோணம் தாலுகாவில் ஜமாபந்தியின் 3வது நாள் நேற்று நடந்தது. இதில் அசமந்தூர், வேடல், சித்தாம்பாடி, கிழவனம், வடமாம்பாக்கம், இச்சிப்புத்தூர், கைனூர், தண்டலம், பெருமாள் ராஜப்பேட்டை, அன்வர்திக்கான்பேட்டை, சித்தேரி, அரும்பாக்கம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜமாபந்தி அலுவலரான மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளியிடம் மனு அளித்தனர்.

அதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை, விவசாய பணிகளுக்கு அனுப்பி வையுங்கள். விவசாயம் செய்வதற்கு தொழிலாளர்கள் பற்றாக்குறையால் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். அரசு வழங்கும் கூலியுடன் சேர்த்து நாங்களும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு ஊதியம் வழங்குகிறோம். இதனை, அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தார். இதில் தாசில்தார் சண்முகசுந்தரம், துணை தாசில்தார் சமரபுரி, வருவாய் ஆய்வாளர் குழந்தை தெரேசா, விஏஓக்கள் லட்சுமி நாராயணன், ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post விவசாய பணிக்கு ஆட்கள் பற்றாக்குறையால் 100 நாள் வேலை தொழிலாளர்களை விவசாய பணிக்கு அனுப்ப வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: