(வேலூர்) விற்பனைக்கு வைத்திருந்த 2.70 டன் வெல்லம் பறிமுதல் கடைகாரர்கள் 2 பேர் அதிரடி கைது பேரணாம்பட்டில் சாராயம் காய்ச்ச

பேரணாம்பட்டு, மே 27: பேராணம்பட்டில் சாராயம் காய்ச்ச விற்பனைக்கு வைத்திருந்த 2.70 டன் வெல்லம் பறிமுதல் செய்து, கடைக்காரர்கள் 2 ேபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பஜார் வீதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு மளிகை கடைகளில் வெல்லம் விற்பதாக மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று பஜார் வீதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பஜார் வீதியில் உள்ள முகமது யாகூப்(40) என்பவரின் கடையில் சோதனை செய்தபோது, கடை மற்றும் கீழ்மட்ட தண்ணீர் தொட்டி உள்ளிட்ட இடங்களில் தலா 50 கிலோ எடை கொண்ட 50 மூட்டைகளில் 1.50 டன் வெல்லம் இருப்பது தெரிய வந்தது.

மேலும் பஜார் வீதியில் உள்ள கமலாபுரம் கிராமத்தை சேர்ந்த பழனி(58) என்பவரின் கடையில் 40 மூட்டைகளில் 1.20 டன் வெல்லம் வைத்திருப்பது தெரியவந்தது. மேலும் வெல்லத்தினை சாராய ஊறல் தயாரிக்க, சாராய வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2.70 டன் வெல்லத்தினை பறிமுதல் செய்து, கடைக்காரர்கள் முகமது யாகூப், பழனி ஆகிய 2பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்ச வெல்லம் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post (வேலூர்) விற்பனைக்கு வைத்திருந்த 2.70 டன் வெல்லம் பறிமுதல் கடைகாரர்கள் 2 பேர் அதிரடி கைது பேரணாம்பட்டில் சாராயம் காய்ச்ச appeared first on Dinakaran.

Related Stories: