நெருக்கடியான போட்டிகளை வெல்ல தோனியிடம் கற்றுக்கொள்ளுங்கள்: தாதா கங்குலி சொல்கிறார்

கொல்கத்தா: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணியில் ஸ்டார் வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாத நிலையிலும் 10வது முறையாக இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது. இது யின் கேப்டன்ஷிக்கு கிடைத்த வெற்றி என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கூறுகையில், “நடப்பு தொடரில் சிஎஸ்கே அணியும் டோனியும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். பெரிய போட்டிகளை எப்படி வெல்ல வேண்டும் என்பது குறித்து மற்றவர்களுக்கு அவர்கள் வழி காண்பித்து உள்ளனர்.

எப்போதும் போல் டோனியின் கேப்டன்சி பிரமிக்கும் வகையில் உள்ளது. நெருக்கடியான போட்டிகளை எப்படி வெல்ல வேண்டும் என தனது கேப்டன்சி மூலம் அவர் மற்றவர்களுக்கு காண்பித்துள்ளார். இதேபோன்று நடப்பு ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள் கவனத்தை ஈர்த்துள்ளனர். அதில் ரிங்கு சிங், துருவ் ஜூரல், ஜெய்ஸ்வால் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். இதுபோல் ஜிதேஷ்சர்மா பஞ்சாப் அணிக்காகவும், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா மும்பை அணிக்காகவும் நன்றாக தங்களது திறமையை வெளிப்படுத்தி உள்ளனர். ஐபிஎல் என்பது மிகப்பெரிய தொடர். இந்த வாய்ப்பை இளம் வீரர்கள் நன்றாக பயன்படுத்திக் உள்ளனர்’’ என்றார்.

The post நெருக்கடியான போட்டிகளை வெல்ல தோனியிடம் கற்றுக்கொள்ளுங்கள்: தாதா கங்குலி சொல்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: