அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ள குவாலிபயர் 2வது போட்டி போட்டிக்கு முன்பாக கலைநிகழ்ச்சிகளுக்கு பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது. குஜராத்த்தில் போட்டி நடைபெறுவதால், பிரபல குஜராத்தி பாடகியான கிஞ்சல் டேவ் பாடல் பாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஐபிஎல் தொடரின் முதல் மற்றும் இறுதிப்போட்டிக்கு மட்டுமே கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும்.
நடப்பு சீசனில் தொடக்க நிகழ்ச்சியில் தமன்னா, ராஷ்மிகா மந்தனா, அர்ஜித் சிங் உள்ளிட்டோர் நடனமாடியும், பாடல் பாடியும் ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். ஆனால் நடப்பு சீசனில் குவாலிபயர் 2வது போட்டியிலேயே கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post குவாலிபயர் 2 போட்டியில் குஜராத் பாடகியின் பாட்டு appeared first on Dinakaran.