அரசு வேலை வாங்கி தருவதாக ₹23.50 லட்சம் மோசடி வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார்

வேலூர், மே 26: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ₹23.50 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. காட்பாடி அடுத்த கணகசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த அமுதா என்பவர் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை ஏமாற்றியதாக மனு அளித்தார். அவர் அளித்த மனுவில், ‘எங்கள் குடும்ப நண்பரான சாம்ரோஸர், ராஜேஷ் ஆகியோர் எனது மகன் சதீஷூக்கு அரசு வேலை வாங்கி தருவதற்காக செலவாகும் என்றனர். பின்னர், சிறுக சிறுக ₹23.50 லட்சம் பணத்தை கொடுத்துள்ளேன். சொன்னப்படி வேலையும் வாங்கி தரவில்லை. பணத்தை கேட்டாலும் திரும்பி தரவில்லை. அவரிடம் இருந்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்’ என தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரசு வேலை வாங்கி தருவதாக ₹23.50 லட்சம் மோசடி வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் appeared first on Dinakaran.

Related Stories: