கஞ்சாவை தடுக்க மாநில எல்லையில் சோதனைச்சாவடிகள் பலப்படுத்தப்படும் புதியதாக பொறுப்பேற்ற வேலூர் எஸ்பி பேட்டி ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு கடத்தப்படும்

வேலூர், மே 26: ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு கடத்தப்படும், கஞ்சாவை தடுக்க மாநில சோதனைச்சாவடிகள் பலப்படுத்தப்படும் என்று புதியதாக பொறுப்பேற்ற வேலூர் மாவட்ட எஸ்பி மணிவண்ணன் கூறினார்.
வேலூர் மாவட்ட எஸ்பியாக மணிவண்ணன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு ஏடிஎஸ்பி பாஸ்கரன், டிஎஸ்பிக்கள் பழனி, ராமமூர்த்தி, சாரதி, திருநாவுக்கரசு, மனோகரன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து புதியதாக பொறுப்பேற்ற எஸ்பி மணிவண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே பணியாற்றியுள்ளேன். மாவட்டத்தை பற்றி நன்கு அறிந்தவன். மக்களின் பிரச்னைகளுக்கு அக்கறையுடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச்சாராயம் விற்பனையை முழுவதுமாக தடுத்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவேன். போக்குவரத்து பிரச்னைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா விற்பனை தடுக்கப்படும். விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த கூடுதலாக சிறப்புகுழு அமைக்கப்படும்.

போக்குவரத்து பிரச்னைக்கு பொதுமக்கள் தங்களது ஆலோசனைகளை வழங்கலாம். ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு கஞ்சா கடத்துவதை தடுக்க வேலூர் மாவட்டத்தில், உள்ள மாநில எல்லைகளில் சோதனைச்சாவடிகள் பலப்படுத்தப்படும். கஞ்சா இல்லாத மாவட்டமாக வேலூர் மாவட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் தேர்வான 2ம் நிலை காவலர்கள் ஆண்கள் 23 பேர், பெண்கள் 18 பேர் என்று மொத்தம் 41 பேருக்கான பணிஆணைகள் வழங்கினார். ஆணை பெற்ற பெண் காவலர்கள் 18 பேர் திருச்சி காவலர் பயிற்சி பள்ளியிலும், ஆண் காவலர்கள் திருவள்ளூர் காவலர் பயிற்சி பள்ளியிலும் பயிற்சிக்கு செல்ல உள்ளனர். ஏற்கனவே பணியாற்றி வந்த எஸ்பி ராேஜஷ்கண்ணன் நாமக்கல் மாவட்டம் எஸ்பியாக பணியிடமாற்றம் ெசய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post கஞ்சாவை தடுக்க மாநில எல்லையில் சோதனைச்சாவடிகள் பலப்படுத்தப்படும் புதியதாக பொறுப்பேற்ற வேலூர் எஸ்பி பேட்டி ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு கடத்தப்படும் appeared first on Dinakaran.

Related Stories: