(தி.மலை) சூறாவளி காற்று வீசியதில் மரங்கள் வேரோடு சாய்ந்தது போக்குவரத்து துண்டிப்பு பெரணமல்லூர் பகுதியில்

பெரணமல்லூர், மே 26: பெரணமல்லூர் பகுதியில் வீசிய சூறாவளி காற்றால் சாலையில் மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கோடை வெப்பம் தற்போது படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 2 நாட்களாக ஆங்காங்கே மாலை நேரங்களில் கருமேகம் சூழ்ந்து இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று பெரணமல்லூர் பகுதியில் மாலை 6 மணிக்கு மேல் திடீரென வானம் இருண்டு சூறாவளி காற்று வீச தொடங்கியது. மேலும் இடி, மின்னல் தாக்கத்தால் லேசான மழை பெய்தது. குறிப்பாக பலத்த ஓசையுடன் சூறாவளி காற்று வீசினால் ஆரணி-வந்தவாசி பிரதான நெடுஞ்சாலையில் உள்ள மரங்கள் கிளை முடிவு ஏற்பட்டது. இதில் திருமணி மற்றும் மேலானூர் கூட்ரோடு பகுதியில் சாலை ஓரத்தில் இருந்த புளிய மரங்கள் வேருடன் சாய்ந்து போக்குவரத்து துண்டிப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆரணி-வந்தவாசி வழியே செல்லும் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் முனுகப்பட்டு வழியே திருப்பி விடப்பட்டது. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் மரங்களை கடந்து சென்றனர்.

The post (தி.மலை) சூறாவளி காற்று வீசியதில் மரங்கள் வேரோடு சாய்ந்தது போக்குவரத்து துண்டிப்பு பெரணமல்லூர் பகுதியில் appeared first on Dinakaran.

Related Stories: