விளையாட்டு வீரர்கள் தேர்வு

சேலம், மே 25: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், பள்ளிகளில் பயிலும், மாணவ, மாணவிகள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப, விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதில் சேர்க்கை பெறுவதற்கான மாவட்ட அளவிலான தேர்வு நேற்று சேலம் காந்தி ஸ்டேடியத்தில் நடந்தது. இதனை உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி தொடங்கி வைத்தார். இதில், மாவட்டம் முழுவதும் இருந்து 108 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த தேர்வானது 30 மீட்டர், 600 மீட்டர், 800 மீட்டர், நின்ற இடத்தில் இருந்து தாண்டுதல், ரப்பர் பந்து வீசுதல் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் நடத்தப்பட்டது. இதில், தேர்வாகும் வீரர், வீராங்கனைகளுக்கு மாநில அளவிலான தேர்வு நடத்தி, பின்னர் விடுதிகளில் சேர்க்கை வழங்கப்படும்.

The post விளையாட்டு வீரர்கள் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: