மாரியம்மன் கோயில் உண்டியல் திறப்பு

நாமகிரிப்பேட்டை, மே 25: நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோயில் சித்திரை தேர்திருவிழா, கடந்த 13ம் தேதி மஞ்சள் நீராடலுடன் முடிந்தது. இதையடுத்து நேற்று கோயில் உண்டியல் காணிக்கை பணத்தை எண்ணும் பணி நடந்தது. இந்து அறநிலையத்துறை கோயில் செயல் அலுவலர் செந்தில்ராஜா, ஆய்வாளர் சந்தியா முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. விழாக்குழுவை சேர்ந்த அன்பழகன், செந்தில், நல்லதம்பி ஆகியோர் உடனிருந்தனர். பக்தர்கள் உதவியுடன் பணத்தை எண்ணும் பணி நடந்தது. 3 உண்டியல்கள் திறக்கப்பட்டது. இதில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ₹1 லட்சத்து 34,758 இருந்தது.

The post மாரியம்மன் கோயில் உண்டியல் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: