நாமக்கல்லில் ஜமாபந்தி துவக்கம்

நாமக்கல், மே 25: நாமக்கல் தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி நிகழ்ச்சி துவங்கியது. சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் பிரபாகரன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை அவர் பெற்றுக்கொண்டார். செல்லப்பம்பட்டி, களங்காணி, ஏளூர், தாளம்பாடி, தத்தாத்திரிபுரம், கரடிப்பட்டி, உடுப்பம், மின்னாம்பள்ளி, பாப்பிநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களின் வருவாய் கணக்குகளை கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டது. இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைபட்டா போன்ற கோரிக்கை மனுக்களை அளித்தனர். மொத்தம் 33 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 2 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு மாறுதல் உத்தரவு கொடுக்கப்பட்டது. தாசில்தார் சக்திவேல், மண்டல துணை தாசில்தார் மோகனா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post நாமக்கல்லில் ஜமாபந்தி துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: