சுகாதாரத்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு முன்னுரிமை: ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்

புதுடெல்லி: இந்திய சுகாதாரத்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அதிகரிக்க முன்னுரிமை அளிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் ‘அனைவருக்கும் சுகாதாரம்’ என்ற கருப்பொருளில் நடைபெறும் 76வது உலக சுகாதார மாநாட்டில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு பேசினார். அப்போது, “கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட சவால்கள் உலக சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளன. தொற்று சவால்களுக்கு எதிராக போரிடுவதில் உலகை இணைத்துள்ளது. ” என்று குறிப்பிட்டார்.

‘இந்தியாவில் சிகிச்சை, இந்தியா வழங்கும் சிகிச்சை’ என்ற அமர்வில் பேசிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “ சுகாதார சவால்கள் சர்வதேச எல்லைகளை கடந்தது என்பதை கொரோனா பெருந்தொற்று உணர்த்தியுள்ளது. இதுபோன்ற சிக்கல்களை தீர்க்க உலகளாவிய ஒருங்கிணைப்பு தேவை. சுகாதார பணியாளர்களின் திறன் கட்டமைப்பை மேம்படுத்துதல், சுகாதாரத்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அதிகரித்தல் ஆகியவற்றுக்கு இந்தியா முன்னுரிமை அளித்து செயலாற்றி வருகிறது” என்று தெரிவித்தார்.

The post சுகாதாரத்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு முன்னுரிமை: ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல் appeared first on Dinakaran.

Related Stories: