சீனா, உக்ரைன்-ரஷ்யா மற்றும் இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் ஆகிய 3 விவகாரங்களினால் தான் இருதரப்பு உறவில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் நட்புறவில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படாது என்றாலும், பாதிக்கப்படும் சூழலில் இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும்.
அதே போல், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்காவும் அளவோடு தலையிட வேண்டும். உக்ரைன்-ரஷ்யா பிரச்சனையில் இரு நாடுகளும் தங்களது நிலையை புரிந்து கொள்ள வேண்டும். பிரதமர் மோடியை பொருத்தவரை, பாஜ மூத்த தலைவராக, பிரதமராக அமெரிக்கா உடனான உறவில் தெளிவாக இருக்கிறார். அதனால் என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும்,” என்று கூறினார்.
The post அமெரிக்காவுடன் என்ன நிலைப்பாடு என பிரதமர் மோடிக்கு தெரியும்; முன்னாள் தூதரக அதிகாரி தகவல் appeared first on Dinakaran.
