ஆசன வாயில் செல்போனை பதுக்கிய சேலம் சிறை கைதி

சேலம்: சேலம் மத்திய சிறையில் விசாரணை கைதியின் ஆசனவாயில் பதுக்கிய செல்போன் போராடி மீட்கப்பட்டது. சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை 6 மணியளவில் குமரகுரு என்ற கைதி காலை தூக்கி தூக்கி வித்தியாசமாக நடந்தார். இதனால் சந்தேகம் அடைந்த வார்டன்கன், அவரை அலேக்காக தூக்கி சென்று ஜெயிலர் அறையில் வைத்து துருவி துருவி விசாரித்தனர்.

அப்போது அவர், ஆசனவாயில் செல்போனை வைத்திருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து ஜெயிலர் மதிவாணன் முன்னிலையில், செல்போனை எடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. கழிவறைக்கு தூக்கிச் சென்று அவரை படுக்க வைத்து செல்போன் எடுக்க முயற்சித்தனர். முக்கால் மணி நேரத்திற்கு பிறகு கேரிபேக்கில் சுற்றப்பட்ட சிறிய செல்போன் ஒன்று வெளியே வந்தது. 3 இஞ்ச் நீளமும், ஒன்றரை இஞ்ச் அகலமும் கொண்ட இந்த செல்போன் சீன தயாரிப்பாகும். விசாரணையில் மதுரையை சேர்ந்த கொலை வழக்கு கைதி தன்னிடம் கொடுத்ததாகவும், அதனை பத்திரமாக ஆசனவாயில் வைக்குமாறு கூறியதாகவும் கைதி குமரகுரு தெரிவித்தார்.

The post ஆசன வாயில் செல்போனை பதுக்கிய சேலம் சிறை கைதி appeared first on Dinakaran.

Related Stories: