பெப்பர் மஷ்ரூம் கிரேவி

தேவையானவை:

பட்டன் காளான்(மஷ்ரூம்) – 2 பாக்கெட்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 1
துண்டு இஞ்சி – 1
பூண்டுப் பல் – 3
மிளகாய்தூள் – தேவைக்கேற்ப
தனியாத்தூள் – 1 மேசைக்கரண்டி
மிளகு – 1 மேசைக்கரண்டி
சோம்பு – 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள்- 1 மேசைக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை:

காளானில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக அலசி நறுக்கிக் கொள்ளவும். (இவ்வாறு செய்தால் காளான் சமைக்கும் வரை நிறம் மாறாமல் இருக்கும்) இஞ்சி பூண்டை விழுதாக்கிக் கொள்ளவும். பின்னர், சோம்பு மற்றும் மிளகு சேர்த்து வறுத்து தூளாக்கவும். பின்னர் வாணலியில் எண்ணெய் சேர்த்து, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை வதக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். பின்னர், மஞ்சள் தூள் மிளகாய்த்தூள், தனியாத்தூள், நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் பட்டன் காளானை உப்பு சேர்த்து நன்கு வதக்கி வேகவிடவும். (தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் தெளிக்கவும்) காளான் வெந்ததும் அரைத்து வைத்துள்ள சோம்பு மற்றும் மிளகு தூளை சேர்த்து நன்கு பிரட்டவும். பின்னர், கறிவேப்பிலையை தூவி இறக்கிவிடவும். சுவையான பெப்பர் மஷ்ரூம் கிரேவி தயார்.

 

The post பெப்பர் மஷ்ரூம் கிரேவி appeared first on Dinakaran.