தெருக்களில் உணவளிக்கும் நாய் பிரியர்களால் பாதிப்பு குடியிருப்பு பகுதிகளில் தனியாக இடம் ஒதுக்க மாநகராட்சி முடிவு: விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை என எச்சரிக்கை

சென்னை, மே 24: தெருக்களில் உணவளிக்கும் நாய் பிரியர்களால் பாதிப்பு ஏற்படுவதாக வந்த புகார்களை தொடர்ந்து, சென்னையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தெரு நாய்களுக்கு உணவளிப்பதற்கு என தனி இடம் ஒதுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கவும் முடிவு செய்துள்ளது. நன்றியுடைய பிராணிகளில் நாய்களுக்கு எப்போதுமே முதலிடம் உண்டு. நாய்களை வளர்ப்போர்கள் தங்கள் வீட்டில் ஒரு உறவாகவே நினைத்து வளர்க்கின்றனர். ஆனால் ஆதரவற்ற நிலையில் திரியும் தெரு நாய்கள் பெருகி வரும் நிலையில், அவை மனிதனுக்கு ஆபத்தை விளைவிப்பவையாக மாறி வருகின்றன. முந்தைய காலங்களில் தொல்லை தரக்கூடிய தெருநாய்கள் பிடிக்கப்பட்டு அவை கொல்ப்பட்டன. இதனால் விலங்குகள் நல அமைப்புகள் மேற்கொண்ட தொடர் முயற்சியால் நாய்களை ெகால்வதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இத தொடர்ந்து தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த இனப்பெருக்க தடுப்பு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நடைமுறை பெரும்பாலும் நகரங்களில் தான் அதிகம் மேற்கொள்ளப்படுகின்றன.

காரணம், தெருநாய்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு இடபற்றாக்குறை இருப்பது தான். இடப் பற்றாக்குறையால் சென்னையில் உள்ள குறுகிய தெருக்களில் அதிக நாய்கள் வலம் வருவதால் அதை மனிதர்கள் சீண்டுவது போன்ற நிகழ்வுகளால் மனிதர்களை கடிக்கின்றன. தெருநாய்களின் இந்த மாற்றத்துக்கு மக்கள் தொகை பெருக்கமும், நகரங்களில் இடமின்மையும் முக்கிய காரணம். முன்பெல்லாம் நாய்களுக்கென்று நிறைய இடங்கள் இருந்தன.
பெரும்பாலும் கிராமப்புறங்களில் நாய்கள் ஊர் எல்லையிலோ, தொலைவாகவோ தான் இருக்கும். ஒரு நிகழ்வின்போது சாப்பாட்டுக்காக மட்டுமே மக்களை நெருங்கும். அவை கிராமங்களில், குப்பைகளில், தெருக்களில் கிடைக்கும் உணவுகளையே உண்ணும். ஆனால், நகர்ப்புறங்களில் இடமின்மை, மக்கள் தொகை காரணமாக குடியிருப்புகள் கட்டடங்கள் அதிகமானதால் நாய்கள் தெருவில் குவிய ஆரம்பித்தன.

அவற்றுக்கென இடங்கள் இல்லாமல் போயின. இதனால் மனிதனர்களுடன் நெருங்கி இருக்கும் வகையில் நாய்கள் தெருவில் தள்ளப்பட்டன. இதனால் தான் சென்ைனையில் தெருநாய்கள் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.இதனால், பொதுமக்களை விரட்டி விரட்டி கடிப்பது போன்ற சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக, சென்னையில் தெருநாய்களின் தொல்லை அதிகமாகவே இருக்கிறது. நாய்களை கொல்ல முடியாது என்பதால் அதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. நாய்களை பிடித்து அவற்றிருக்கு இனப்பெருக்க தடுப்பு அறுவை சிகிச்சை செய்து அதே இடங்களில் விடப்பட்டு வருகிறது.
சென்னையை பொறுத்தவரையில் 1.20 லட்சத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளதாக பொதுநல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். சென்னை மாநகராட்சிக்கு வரும் புகார்களில் பெரும்பாலானவை நாய்கள் தொடர்பானவை. நாய்கள் தொடர்பாக 1913 உதவி எண்ணில் தினமும் 80 புகார்கள் வருகின்றன. இதில் பல புகார்கள் குடியிருப்பு பகுதிகளில் நாய்களுக்கு உணவளிக்கும் நாய் பிரியர்கள் தொடர்பானவை ஆகும்.

குடியிருப்பு பகுதியிலேயே தெருநாய் தொல்லை இருந்தாலும், அவற்றிற்கு உணவளித்து பாதுகாக்கும் நாய்பிரியர்களும் இருக்கத் தான் செய்கின்றன. நல் உள்ளத்தோடு அவர்கள் உணவளித்தாலும், இதன் மூலம் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு தேவையற்ற தொந்தரவுகள் ஏற்படுகின்றன. இது தொடர்பான புகார்கள் சென்னை மாநகராட்சிக்கு அதிகம் அளவில் வருவதாக கூறப்படுகிறது. தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம், ‘தெருநாய்களுக்குத் தொடர்ந்து உணவளிக்கும் நபர்களே அவற்றிற்கு தடுப்பூசி போடுவதற்கும் பொறுப்பாவார்கள் எனவும், மேலும் அந்த விலங்குகள் மக்களைத் கடித்தால் அதற்கான செலவையும் அவர்களே ஏற்க வேண்டும்’ எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், பசியோடு சுற்றி திரியும் தெரு நாய்களுக்கு உணவளிக்கும் உணவு பிரியர்கள் அதற்கு தொடர்ந்து உணவளிக்கத் தான் செய்கின்றனர். அவர்களை கண்டதும் அந்த பகுதியில் உள்ள தெரு நாய்கள் வரிந்து கட்டிக் கொண்டு ஓடி வருகின்றன. ஒரு புறம் மனிதாபிமானத்தோடு பார்க்க வேண்டிய செயல். ஆனாலும் அந்த நாய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையும் ஏற்றுக் ெகாள்ள முடியாது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், விலங்குகள் நல தன்னார்வலர்களுடன் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சமீபத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண குடியிருப்போர் சங்கங்களுடன் கலந்தாலோசிக்க குடிமை அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது. இதையடுத்து தெரு நாய்களுக்கு உணவளிப்பதற்காக இடம் ஒதுக்குவது குறிதது சென்னை மாநகராட்சி பரிசீலித்து வருகிறது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் பல்வேறு தெருக்களில் தெரு நாய்கள் பாதிப்பு உள்ளது. அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் நாய்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக இனப்பெருக்க தடுப்பு அறுவை சிகிச்சையை தீவிரப்படுத்தி வருகிறோம். மேலும், குடியிருப்பு பகுதிகளில் தெரு நாய்களுக்கு உணவு அளிக்க தனி இடம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மட்டுமே நாய் பிரியர்கள் தாங்கள் கொண்டு வரும் உணவுகளை தெரு நாய்களுக்கு அளிக்க வேண்டும். இதுபோன்ற சென்னையில் பல்வேறு தெருக்களில் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அதற்கான இடங்கள் தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில், இடங்களை தேர்வு செய்வது குறித்து முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதை மீறுபவர்களுக்கு தண்டனை பற்றி குறிப்பிடப்படவில்லை. ஆனால் விதிகளை மீறி கண்ட கண்ட இடங்களில் நாய்களுக்கு உணவளிப்பவர்களுக்கு தண்டனை விரைவில் முடிவு செய்து அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

15,696 நாய்களுக்கு தடுப்பூசி
சென்னையில் தெரு நாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து தடுப்பூசி போட்டு அதே பகுதிகளில் மீண்டும் விடப்படுகிறது. ஆனால் இதற்கு பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை பிடிபட்ட 20,385 நாய்களில் 15,696 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு மீண்டும் குடியிருப்பு பகுதிகளில் விடப்பட்டுள்ளன.

விலங்குகள் கடித்த வழக்கு
கடந்த 2019ம் ஆண்டு முதல் இந்தியாவில் 1.5 கோடி விலங்குகள் கடித்த வழக்குகள் பதிவாகியுள்ளன. அதிலும் அதிக வழக்குகள் பதிவானது உத்திர பிரதேசத்தில், அடுத்தபடியாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் உள்ளது. 2019ம் ஆண்டில் 72,77,523 விலங்கு கடி வழக்குகள் இருந்தன. இது 2020ல் 46,33,493 ஆக குறைந்துள்ளது. இருப்பினும், 2022ம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மட்டும், 14.5 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளன. அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் பதிவாகியுள்ளன.

The post தெருக்களில் உணவளிக்கும் நாய் பிரியர்களால் பாதிப்பு குடியிருப்பு பகுதிகளில் தனியாக இடம் ஒதுக்க மாநகராட்சி முடிவு: விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை என எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: