நாமக்கல், மே 24: நாமக்கல், திருச்செங்கோடு ரோட்டில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் 1250 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். திருச்செங்கோடு, கொங்கணாபுரம், ஈரோடு, அவிநாசி, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் கோரினர். இதில், ஆர்சிஎச் ரக பருத்தி குவிண்டால் ₹7,840 வரையிம், மட்டரக பருத்தி ₹5269 வரையிலும் ஏலம் போனது. ஆக மொத்தம் 1250 மூட்டை ₹27 லட்சத்திற்கு விற்பனையானது.
The post 27 லட்சத்திற்கு பருத்தி ஏலம் appeared first on Dinakaran.