குக்கூம்பர் சாலட்

தேவையானவை:

விதை நீக்கி, தோல் சீவி பொடியாக நறுக்கிய குக்கூம்பர் (தோசைக்காய்) – 2 கப்,
துருவிய கேரட் – ¾ கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – ½ கப்,
கெட்டி தயிர் – 1 கப்,
கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது – 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு,
மிளகுத் தூள் – தேவைக்கேற்ப.

செய்முறை:

ஒரு பவுலில் நறுக்கிய குக்கூம்பர், கேரட், வெங்காயம், தயிர், தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலக்கி, மேலே கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

The post குக்கூம்பர் சாலட் appeared first on Dinakaran.