காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.68.50 லட்சம் வசூல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்த 2 உண்டியல்கள் 55 நாட்களுக்கு பிறகு, நேற்று திறந்து எண்ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.60.58 லட்சம் செலுத்திருந்தனர். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்த இரு உண்டியல்கள் 55 நாட்களுக்கு பிறகு கோயில் ஸ்ரீகாரியம் சுந்தரேசன் முன்னிலையில் நவராத்திரி மண்டபத்தில் திறந்து எண்ணப்பட்டபோது. அப்போது, அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் கார்த்திகேயன், அமுதா, ஆய்வாளர் பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோபிகா ரெத்னம் அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் இணைந்து உண்டியல் தொகையை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில், ரூ.60 லட்சத்தது 58 ஆயிரத்து 345, தங்கம் 321.04 கிராம், வெள்ளி 557.830 கிராம் ஆகியன இருந்தது. இதுதவிர வெளிநாட்டு பணத்தாள்கள் (எண்ணிக்கையில்) சிங்கப்பூர் 42, அமெரிக்கா 1662, கனடா (120), மலேசியா (906), கட்டார் (61), குவைத் (10), கொரியா (1000) ஆகியனவும் இருந்தன.

The post காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.68.50 லட்சம் வசூல் appeared first on Dinakaran.

Related Stories: