கறுப்பு எள்ளு துவையல்

தேவையானவை:

கறுப்பு எள்ளு – 2 தேக்கரண்டி
தேங்காய்த்துருவல் – 2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் – 5
புளி – நெல்லிக்காய் அளவு
பூண்டு – 3 பற்கள்
எண்ணெய் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

எள்ளை சுத்தம் செய்து, வாணலியிலிட்டு, வாசனை வரும் வரை வறுக்கவும். எள் வெடிக்க ஆரம்பித்ததும், ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும். அதே வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, உளுந்தம் பருப்பைப் சிவக்க வறுத்துக் கொள்ளவும். அதனுடன் மிளகாய் வற்றல், பூண்டு, புளி ஆகியவற்றைச் சேர்த்து ஓரிரு விநாடிகள் வறுக்கவும். கடைசியில் தேங்காய்த் துருவலைச் சேர்த்து மேலும் ஓரிரு விநாடிகள் வதக்கிய பின் ஆற வைக்கவும். பின்னர் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு, உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்தெடுக்கவும்.

 

 

The post கறுப்பு எள்ளு துவையல் appeared first on Dinakaran.