ஓசூர் அருகே மாநில எல்லையில் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற கார்-போலீஸ்காரர் டூவீலரையும் இடித்து தள்ளியது

ஓசூர் : ஓசூர் அருகே மாநில எல்லையில் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி நிற்காமல் சென்ற கார், போலீஸ்காரர் டூவீலரையும் இடித்து தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே சிப்காட் போலீசார் நேற்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கர்நாடகவிலிருந்து சொகுசு கார் ஒன்று வந்துள்ளது. போலீசார் அதனை தடுத்து நிறுத்தவே நிற்காமல் வேகமெடுத்தது.

உடனே, போலீசார் பின்தொடர்ந்து சென்றனர். பள்ளூர் செல்லும் வழியில் போலீசார் ஒருவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தினை சாலையின் குறுக்கே நிறுத்தி காரை வழிமறித்தார். ஆனால், அந்த கார் போலீஸ் வாகனத்தின் மீது மோதி விட்டு அதிவேகமாக சென்றது.

அப்போது, அந்த பகுதியில் மூன்று பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதியவாறு சென்றுள்ளது. இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக பைக்கில் வந்தவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். பைக்குகள் முற்றிலும் சேதமடைந்தது. காரில் வந்தவர்களை பிடித்து விசாரித்தால் மட்டுமே நிற்காமல் சென்றதற்கான காரணம் தெரிய வரும் என சிப்காட் போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post ஓசூர் அருகே மாநில எல்லையில் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற கார்-போலீஸ்காரர் டூவீலரையும் இடித்து தள்ளியது appeared first on Dinakaran.

Related Stories: