கருணாநிதி பிறந்தநாள் கிரிக்கெட் போட்டி

 

ராசிபுரம், மே 22:ராசிபுரத்தில், கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ராசிபுரம் அணி முதலிடம் பிடித்தது.ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், வேகன் ஸ்டார் கிரிக்கெட் கிளப் சார்பில், கருணாநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் நாமக்கல் மற்றும் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 32 அணிகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று விளையாடினர். இதில், முதல் பரிசை ராசிபுரம் பையர் ஸ்டிக்கர்ஸ் அணியும், இரண்டாம் பரிசை ராசிபுரம் வேகன் ஸ்டார் அணியும், மூன்றாம் பரிசை ஜலகண்டாபுரம் வெங்கடேஷ் பிரதர்ஸ் அணியும், நான்காம் பரிசை புத்திரகவுண்டம்பாளையம் எப்சிசி கிங்ஸ் அணியும், ஐந்தாம் பரிசை ராசிபுரம் வேகன் சிசி அணியும் பெற்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு, திமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார், ராசிபுரம் நகர திமுக செயலாளர் சங்கர் மற்றும் ராசிபுரம் நகரமன்ற தலைவர் கவிதா சங்கர் ஆகியோர் ₹50,000 மற்றும் கோப்பை, இரண்டாம் பரிசை மோகன் குமார் ₹40,000 மற்றும் கோப்பை, மூன்றாம் பரிசு ராசிபுரம் நகர்மன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி ₹30,000 மற்றும் கோப்பை, நான்காம் பரிசு பாபு, ராஜ்குமார் மற்றும் இஞ்சிமுறப்பான் ஆகியோர் ₹15,000 மற்றும் கோப்பை, ஐந்தாம் பரிசு கௌரி சங்கர், வெற்றி மொபைல் மற்றும் பாலமுருகன் இணைந்து ₹10,000 மற்றும் கோப்பைகளை வழங்கினர். இப்போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி, ராசிபுரம் திமுக நகர செயலாளர் சங்கர் பரிசுகளை வழங்கினர். போட்டி ஏற்பாடுகளை, ராசிபுரம் வேகன் ஸ்டார் கிரிக்கெட் கிளப் குழுவினர் செய்திருந்தனர்.

The post கருணாநிதி பிறந்தநாள் கிரிக்கெட் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: