டிரான்ஸ்பார்மர் திறப்பு விழா

 

மோகனூர், மே 20: வளையப்பட்டி துணை மின் நிலையத்தில் ரூ.5.54 கோடி மதிப்பில் புதிய டிரான்ஸ்பார்மரை பொன்னுசாமி எம்எல்ஏ பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மோகனூர் ஒன்றியம், வளையப்பட்டி துணை மின் நிலையத்தில் ரூ.5.54 கோடி மதிப்பில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று சென்னையில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து, வளையப்பட்டியில் துவக்க விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சேந்தமங்கலம் பொன்னுசாமி எம்எல்ஏ, நாமக்கல் செயற்பொறியாளர் நாகராஜ், மோகனூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நவலடி ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் பூவராகவன், வளையப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சரஸ்வதி சண்முகம், உதவி செயற்பொறியாளர்கள் ஆனந்தபாபு, பிரேம்நாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post டிரான்ஸ்பார்மர் திறப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: