ரூ.1.35 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

 

திருச்செங்கோடு, மே 20: திருச்செங்கோட்டில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.35 லட்சத்திற்கு கொப்பரை விற்பனையானது. திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் திருச்செங்கோடு தலைமையகத்தில், கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில், சுற்றுப்புற பகுதியிலிருந்து 40 மூட்டைகளை கொண்டு வந்து குவித்தனர். முதல் தரம் கிலோ ரூ.71..45 முதல் ரூ.82.60 வரையிலும், இரண்டாம் தரம் ரூ.55.75 முதல் ரூ.67.55 வரையிலும் விற்பனையானது. ஆக மொத்தம் ரூ.1.35 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.

The post ரூ.1.35 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: