254 உபரி முதுகலை ஆசிரியர்களை ஐஎப்ஆர்எம்எஸ் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவு ஆணையரின் பொதுத் தொகுப்பில் இருந்த

வேலூர், மே 19: உபரி முதுகலை ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதாக ஐஎப்ஆர்எம்எஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவதுபள்ளிக்கல்வி ஆணையர் அனுப்பியுள்ள கடிதத்தில், 01.08.2022 அன்றைய நிலவரப்படி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிகையின் அடிப்படையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை -1 பணியாளர் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டது. 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும், பணியாளர் நிர்ணய கணக்கீட்டின்படி (11-12 ஆம் வகுப்புக்கு 1:60 என்ற விகிதாச்சாரப்படி) கூடுதல் பணியிடங்கள் தேவை உள்ள பள்ளிகள் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு கண்டறியப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலன் பொருட்டு, தற்போது முதுகலை பட்டதாரி ஆசிரியர் நிலையில் ஆணையரின் பொதுத் தொகுப்பில் இருந்து 254 ஆசிரியரின்றி உபரி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை 01.08.2022 நிலவரப்படி உபரி பணியிடங்கள் ஆணையரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்யப்பட்டது. முன்னுரிமை அடிப்படையில் 24 மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. அவ்வாறு கூடுதல் பணியிடங்கள் தேவையுள்ள பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட 254 பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் மற்றும் இதர படிகள் ஆகியவற்றினை நடைமுறையில் உள்ள ஐஎப்எச்ஆர்எம்எஸ் இணையதளத்தின் மூலமாக பெற்று வழங்க எதுவாக, ஆசிரியரின்றி உபரியாக ஆணையரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்யப்பட்ட பள்ளியிலிருந்து கூடுதல் பணியிடம் அனுமதிக்கப்பட்ட பள்ளியிக்கு ஐஎப்எச்ஆர்எம்எஸ் பதிவேற்றம் செய்து உரிய ஆணை வழங்குமாறு பள்ளிக் கல்வி ஆணையர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

பள்ளிக் கல்வி ஆணையரின் கருத்துருவை கவனமாக ஆய்வு செய்து அதனை ஏற்று, அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2022 அன்றுள்ளவாறு முதுகலை பட்டதாரி ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி ஆணையரின் பொதுத் தொகுப்பில் இருந்து உபரி பணியிடங்கள் ஆணையரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்யப்பட்டது. கூடுதல் பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட 249 ஆசிரியரின்றி உபரி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் மற்றும் இதர படிகள் ஆகியவற்றினை நடைமுறையில் உள்ள ஐஎப்எச்ஆர்எம்எஸ் மூலமாக பெற்று வழங்கும் வகையில் அப்பணியிடங்கள் அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

The post 254 உபரி முதுகலை ஆசிரியர்களை ஐஎப்ஆர்எம்எஸ் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவு ஆணையரின் பொதுத் தொகுப்பில் இருந்த appeared first on Dinakaran.

Related Stories: