ஊத்துக்குளி பேரூராட்சியில் ரூ.15.28 கோடியில் அம்ரூத் திட்டத்தில் குடிநீர் மேம்பாட்டு பணி

 

திருப்பூர், மே. 19: ஊத்துக்குளி பேரூராட்சியில் ரூ.15.28 கோடி மதிப்பில் அம்ரூத் திட்டத்தில் குடிநீர் மேம்பாட்டு பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். திருப்பூர் ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.15.28 கோடி மதிப்பில் அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர் மேம்பாட்டு பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இது குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: தமிழக முதல்-அமைச்சர் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

இதன் மூலம் பொதுமக்கள் பலரும் பயனடைந்து வருகிறார்கள். திருப்பூர் மாவட்டத்திலும் ஏராளமான வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் 4 ஆயிரத்து 900 வீடுகளுக்கு சுமார் ரூ.15.28 கோடி மதிப்பில் தனிநபர் இல்ல குடிநீர் இணைப்பு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், வருவாய்த்துறையின் சார்பில் 15 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறையின் சார்பில் 3 பேருக்கு வேளாண் இடுபொருட்களும் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் ஊத்துக்குளி பேரூராட்சி தலைவர் பழனியம்மாள், ஊத்துக்குளி பேரூராட்சி செயல் அலுவலர் இந்துமதி, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

The post ஊத்துக்குளி பேரூராட்சியில் ரூ.15.28 கோடியில் அம்ரூத் திட்டத்தில் குடிநீர் மேம்பாட்டு பணி appeared first on Dinakaran.

Related Stories: