டெல்லியில் 27ம் தேதி ‘நிதி ஆயோக்’ கூட்டம்: பிரதமர் மோடி தலைமையில் நடக்கிறது

புதுடெல்லி: ஒன்றிய திட்டக்குழுவுக்கு மாற்றாக ‘நிதி ஆயோக்’ என்ற அமைப்பினை ஒன்றிய பாஜ கூட்டணி அரசு கொண்டு வந்துள்ளது. இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் மோடியும் துணைத்தலைவராக சுமன் பெரி இருக்கின்றனர். இதன் ஆட்சிமன்ற குழுவில் அனைத்து மாநிலங்களின் முதல்வர்களும், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்களும் இடம் பெற்றுள்ளனர். இதன் ஆட்சிமன்ற குழு கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. கடந்தாண்டு, பிரதமர் மோடி தலைமையில் ஆகஸ்டு 7ம் தேதி நடந்தது. இந்தாண்டு நிதி ஆயோக் ஆட்சிமன்ற குழு கூட்டம், வரும் 27ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமை வகிக்கிறார்.

கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் முதல்வர்களும் கலந்து கொள்கிறார்கள். மாநிலங்கள், தங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக பிரதமரிடம் கோரிக்கை வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், மாநிலங்கள் வளர்ச்சி பெற கடுமையாக உழைக்க வேண்டும், 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவை நிறைவேற்றுவதற்கு இலக்கு வைத்து பாடுபட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டு கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post டெல்லியில் 27ம் தேதி ‘நிதி ஆயோக்’ கூட்டம்: பிரதமர் மோடி தலைமையில் நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: