பொது வாக்கெடுப்பின் மூலம் தமிழ் ஈழம் மலரும்: முள்ளிவாய்க்கால் போர் நினைவேந்தல் கூட்டத்தில் வைகோ உறுதி

சென்னை: பொது வாக்கெடுப்பின் மூலம் தமிழ் ஈழம் மலரும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உறுதிபட தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் போரில் ஈழத்தமிழர்கள் உயிரிழந்த 14ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் எழும்பூரில் மதிமுக தலைமை அலுவலகமான தாயகம் வளாகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய வைகோ, இன்றைக்கு அனைத்து தலைவர்களும் ஈழ பிரச்சனைக்கு பொதுவாக்கெடுப்பு தேவை என்று கூறும்பொழுது ஏதோ ஒன்றை சாதித்ததாக மனதில் நினைத்துக்கொள்வேன் என்று கூறியுள்ளார்.

வேறுபாடுகளை மறந்து பொதுவாக்கெடுப்பை நோக்கி ஒரு இலக்கோடு சென்றால் 14 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஈழப்படுகொலைக்கு நீதி கிடைக்கும் என்று வைகோ தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மே 17 நினைவு சின்னத்திற்கு கையில் மெழுகு வர்த்தி ஏந்தியபடி அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

The post பொது வாக்கெடுப்பின் மூலம் தமிழ் ஈழம் மலரும்: முள்ளிவாய்க்கால் போர் நினைவேந்தல் கூட்டத்தில் வைகோ உறுதி appeared first on Dinakaran.

Related Stories: