ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் செய்தார் பிரதமர் மோடி!:சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மாற்றம்; புதிய அமைச்சராக அர்ஜுன் ராம் மேவால் நியமனம்..!!

டெல்லி: ஒன்றிய அமைச்சரவையில் பிரதமர் நரேந்திர மோடி அதிரடி மாற்றம் செய்துள்ளார். ஒன்றிய சட்டத்துறை அமைச்சராக அர்ஜுன் ராம் மேவால் நியமிக்கப்பட்டுள்ளார். ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேவாலுக்கு சட்டத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள துறைகளுடன் சேர்த்து சட்டத்துறையை அமைச்சர் அர்ஜுன் ராம் மேவால் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஒன்றிய சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜுவுக்கு புவி அறிவியல்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு தொடர்ந்து கொலிஜியம் தேர்வு முறையை எதிர்த்து வந்தார். கொலிஜியம் தேர்வு முறை புதிராக உள்ளது.

இதில் தேர்வுகள் மறைமுகமாக இல்லை. இதில் வெளிப்படை தன்மையை ஏற்படுத்த வேண்டும், நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் அமைப்பில் ஒன்றிய அரசின் பிரதிநிதிகளையும் சேர்க்க வேண்டும் என்று ஒன்றிய சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு தெரிவித்து வந்தார். நீதித்துறையில் தலையிடுவதாக எழுந்த புகாரை அடுத்து சட்டத்துறை அமைச்சர் பதவியில் இருந்து தற்போது கிரண் ரிஜிஜு மாற்றப்பட்டிருக்கிறார். கொலிஜியம் குறித்து சர்ச்சையான கருத்துக்களை கூறி வந்ததால் கிரண் ரிஜிஜு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இரு அமைச்சர்களின் துறைகள் மாற்றம் குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பை ஏற்பதாக குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

The post ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் செய்தார் பிரதமர் மோடி!:சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மாற்றம்; புதிய அமைச்சராக அர்ஜுன் ராம் மேவால் நியமனம்..!! appeared first on Dinakaran.

Related Stories: