(வேலூர்) 3 புஷ்ப பல்லக்குகள் திருவீதி உலா விடிய விடிய நடைபெற்றது கெங்கையம்மன் சிரசு திருவிழாவை முன்னிட்டு

குடியாத்தம், மே 18 : குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் 1ம் தேதி வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி கடந்த 15ம் தேதி சிரசு திருவிழா நடைபெற்றது. இதில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 3ம் நாளான நேற்று கெங்கையம்மன் சிரசு திருவிழாவை முன்னிட்டு 3 புஷ்பப் பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. கெங்கையம்மன் கோயில் இருந்து ஒரு பூப்பல்லக்கும், தரணம்பேட்டை காளியம்மன் கோயில் அருகே இருந்து புஷ்ப வியாபாரிகள் சங்கம் சார்பாக ஒரு பூப்பல்லக்கும், நடுப்பேட்டை நண்பர்கள் குழு சார்பாக காசி விஸ்வநாதர் கோயிலில் இருந்து ஒரு பூப்பல்லக்கு என 3 பூப்பல்லக்கில் ஒரே நாளில் குடியாத்தம் நகரில் வலம் வந்தது இதனால், குடியாத்தம் நகரம் முழுவதும் இரவிலும் விழாக்கோலமாக காணப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இரவிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். வீதி உலாவிற்கு குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பூப்பல்லக்கு வீதி உலாவால் குடியாத்தம் நகரம் முழுவதும் நேற்று இரவு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

The post (வேலூர்) 3 புஷ்ப பல்லக்குகள் திருவீதி உலா விடிய விடிய நடைபெற்றது கெங்கையம்மன் சிரசு திருவிழாவை முன்னிட்டு appeared first on Dinakaran.

Related Stories: