மீன் ரோஸ்ட்

தேவையான பொருட்கள்:

மீன் – ½ கிலோ
மஞ்சள் தூள் -1 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்
தனியா தூள் -2 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் -2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் -தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப
எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
முட்டை – 3.

செய்முறை :

மீனை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும். சுத்தம் செய்த பின் சிறிய துண்டு களாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தனியா தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதில் முட்டை அடித்து ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீன் துண்டு களை கலவையில் போட்டு எடுத்து, பின் எண்ணெயில் போட்டு வறுத்து எடுக்கவும். சுவையான மீன் ரோஸ்ட் ரெடி.

The post மீன் ரோஸ்ட் appeared first on Dinakaran.