பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வரை தேர்ந்தெடுப்பதில் எந்த குழப்பமும் இல்லை என முன்னாள் கர்நாடக துணை முதல்வர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முதல்வர் யார் என்பது குறித்து இன்று அல்லது நாளைக்குள் முடிவு வெளியாகும் என்று கூறினார். கர்நாடகாவில் காங்கிரஸ் வென்றுள்ள நிலையில் முதல்வரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, டி.கே.சிவகுமார் இடையே முதல்வர் பதவிக்கு போட்டி நிலவுகிறது.
The post கர்நாடகாவில் முதல்வரை தேர்ந்தெடுப்பதில் எந்த குழப்பமும் இல்லை: முன்னாள் கர்நாடக துணை முதல்வர் பரமேஸ்வரா பேட்டி appeared first on Dinakaran.
