பொய்கை மாட்டுச்சந்தையில் மாடுகள் வரத்து குறைந்தது வாங்க ஆர்வம் காட்டாத விவசாயிகள் தொடர்ந்து அதிகரிக்கும் கோடை வெயில் தாக்கத்தால்

வேலூர், மே 17: தொடர்ந்து அதிகரிக்கும் கோடை வெயில் தாக்கத்தால் வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் மாடுகள் வரத்து குறைந்தால், விற்பனையும் சரிந்துள்ளது. தமிழகத்தின் முக்கிய கால்நடை வாரச்சந்தைகளில் பொய்கை மாட்டுச்சந்தை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒவ்வொரு செவ்வாய் கிழமையன்றும் நடைபெறும் இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் இருந்து வி.கோட்டா, குப்பம், பலமநேர், புங்கனூரு என பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இதனால் சீசன் நேரங்களில் இந்த சந்தையில் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும். இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மாடுகள் வரத்து குறைந்துள்ளது. நேற்று கறவை மாடுகள், ஜெசி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் என ஆயிரத்துக்கும் குறைவாக விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: கடந்த வாரம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் வந்ததால் வர்த்தகம் ₹1.50 கோடிக்கு மேல் நடந்தது. ஆனால் கோடையின் தாக்கம் காரணமாக தீவனப்பற்றாக்குறை பிரச்னை ஏற்பட்டது. ஆனால் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கோடை மழை பெய்ததால் புற்கள் முளைக்க தொடங்கி உள்ளது. அடுத்தடுத்து மழை பெய்வதால் இனி தீவனப்பற்றாக்குறை போக்கிறது. ஆனால் மீண்டும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மாடுகள் விற்பனை செய்ய ஆர்வம் காட்டவில்லை. அப்படியே விற்பனை செய்தாலும் குறைந்து விலைக்கு தான் விற்பனையாகும். இதனால் சந்தைக்கு விற்பனைக்கு வருவது குறைந்துள்ளது. ஆனால் மாடுகள் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post பொய்கை மாட்டுச்சந்தையில் மாடுகள் வரத்து குறைந்தது வாங்க ஆர்வம் காட்டாத விவசாயிகள் தொடர்ந்து அதிகரிக்கும் கோடை வெயில் தாக்கத்தால் appeared first on Dinakaran.

Related Stories: