பாஜகவின் 9 ஆண்டு ஆட்சி நிறைவு: சாதனைகளை எடுத்து கூற நிகழ்ச்சிகள் ஏற்பாடு

டெல்லி: ஒன்றிய பாஜக அரசின் 9 ஆண்டுகால ஆட்சி நிறைவடைய உள்ள நிலையில், ஆட்சியின் சாதனைகளை எடுத்து கூற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு இரண்டாவது முறையாக பதவியேற்று வரும் 26ம் தேதியுடன் 9 ஆண்டுகள் நிறைவடைகிறது. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால், ஒன்றிய அரசின் சாதனைகளை வீடு வீடாக கொண்டு சேர்க்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. அதன்படி, ‘ஒன்றிய மற்றும் மாநில அளவில் 9 ஆண்டு சாதனை’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியான ‘விசேஷ சங்க்ஷா அபியான்’ என்ற நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த நிகழ்ச்சிகள் வரும் 30ம் தேதி வரை நடைபெறும். கடந்த 50 ஆண்டுகளில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் ஆளுங்கட்சி என்ற பெருமையை பாஜக பெற்றுள்ளது. ஒன்றிய அரசின் 9 ஆண்டு சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க 3 வகையான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பாஜக மூத்த தலைவர்களின் 51 பேரணிகள், 396 மக்களவைத் தொகுதிகளில் பொதுக்கூட்டம் ஆகியன நடத்தப்படுகின்றன.

The post பாஜகவின் 9 ஆண்டு ஆட்சி நிறைவு: சாதனைகளை எடுத்து கூற நிகழ்ச்சிகள் ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: