புதுடெல்லி: சிபிஐ விசாரணை அமைப்பின் புதிய இயக்குனராக பிரவீன் சூட் நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநில டிஜிபியான பிரவீன் சூட்டை, சிபிஐ-யின் புதிய இயக்குனராக ஒன்றிய அரசு நியமித்துள்ளது.சிபிஐ புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள பிரவீன் சூட், அடுத்த இரண்டு ஆண்டு காலம் பதவி வகிப்பார்.
மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) இயக்குநராக தேர்வு செய்யப்படுவோரை, பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்ட குழு தேர்வு செய்கிறது. தற்போதைய சிபிஐ இயக்குநர் சுபோத் குமார் ஜெய்ஸ்வாலின் இரண்டு ஆண்டுகால பதவிக்காலம் வரும் 25ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் புதிய சிபிஐ இயக்குநரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கி நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர் பட்டியில் பரிந்துரையாக வழங்கப்பட்டது. அந்த பட்டியலில் கர்நாடக காவல்துறை இயக்குநர் (டிஜிபி) பிரவீன் சூட் உள்ளிட்ட 3 பேரின் பெயர்கள் உள்ளன. மேற்கண்ட கூட்டத்தில், சிபிஐ இயக்குநரின் பதவிகாலத்தை 2 ஆண்டில் இருந்து 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கவும், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் மற்றும் லோக்பால் உறுப்பினரை தேர்வு செய்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்தனை தொடர்ந்து, சிபிஐ விசாரணை அமைப்பின் புதிய இயக்குனராக பிரவீன் சூட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
The post சிபிஐ விசாரணை அமைப்பின் புதிய இயக்குனராக பிரவீன் சூட் தேர்வு appeared first on Dinakaran.
