பாஜவில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கிய சுரங்க தொழிலதிபர் ஜனார்த்தன ரெட்டி வெற்றி

கர்நாடக: கர்நாடக சுரங்கத் தொழிலதிபர் ஜனார்த்தன ரெட்டி பாஜவிலிருந்து விலகி கல்யாண ராஜ்ய பிரகதி பக்‌ஷா என்ற கட்சியை தொடங்கினார். இந்த தேர்தலில் அவர் கங்காவதி தொகுதியிலும் அவரது மனைவி அருணா லட்சுமி பெல்லாரி தொகுதியிலும் போட்டியிட்டனர். ஜனார்த்தன ரெட்டி கங்காவதி தொகுதியில் 65791 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தில் காங்கிரசின் இக்பால் அன்சாரி 57674 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜ இந்த தொகுதியில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதன் வேட்பாளர் பரணா ஈஸ்வரப்பா முனாவள்ளி 28918 வாக்குகளே பெற்றிருந்தார்.

பெல்லாரி சிட்டி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நர பாரத் ரெட்டி 85800 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். இந்த தொகுதியில் பாஜ வேட்பாளர் சோமசேகர ரெட்டி 36751 வாக்குகள் பெற்றுள்ளார். ஜனார்த்தன ரெட்டியின் மனைவி அருணா லட்சுமி 48118 வாக்குகள் பெற்றுள்ளார். இதன் மூலம் இந்த தொகுதியிலும் பாஜ 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. ஜனார்த்தன ரெட்டி பாஜவில் தொடர்ந்திருந்தால் இந்த இரண்டு தொகுதிகளிலும் பாஜ வெற்றி பெற்றிருக்கும்என்று பாஜவினர் பேசிக்கொள்கிறார்கள்.

The post பாஜவில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கிய சுரங்க தொழிலதிபர் ஜனார்த்தன ரெட்டி வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: