பாஞ்சாலங்குறிச்சி வீரசக்க தேவி ஆலய விழா பாளையில் இருந்து தொடர் ஜோதி ஓட்டம்-அப்துல்வஹாப் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

நெல்லை : பாஞ்சாலங்குறிச்சியில் நடைபெறும் வீரசக்க தேவி ஆலய விழாவையொட்டி பாளையில் இருந்து புனிதநீர் மற்றும் தொடர் ஜோதி ஓட்டத்தை நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வஹாப் எம்எல்ஏ துவக்கி வைத்தார். பாஞ்சாலங்குறிச்சி வீரசக்க தேவி ஆலய 67வது ஆண்டு திருவிழாவையொட்டி வீரபாண்டிய கட்டபொம்மன் தொண்டர் படை சார்பில் பாளையில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை அருகில் இருந்து புனிதநீர் மற்றும் தொடர் ஜோதி ஓட்டப் பேரணி நேற்று நடந்தது.

வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக மாவட்ட தலைவர் கண்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஜோதி ஓட்டத்தை நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல்வஹாப் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

தொடர்ந்து ஜோதி ஓட்டம், பாளை இக்னேஷியஸ் கான்வென்ட் வரை சென்றது. தொண்டர் படை தலைவர் விநாயகர், செயலாளர் வீரபெருமாள், பொருளாளர் பாலாஜி, துணை தலைவர் வெள்ளைச் சாமி, துணை செயலாளர் மாரிமுத்து ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் பேரணியில் பங்கேற்றவர்கள், வேன் மற்றும் 5 வாகனங்களில் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்க தேவி ஆலய விழாவுக்கு புறப்பட்டு சென்றனர்.

இதில் பாளை மண்டல தலைவர் பிரான்சிஸ், திமுக மாவட்ட துணைச் செயலாளர் தர்மன், மூளிக்குளம் பிரபு, கவுன்சிலர் பாலன், முன்னாள் கவுன்சிலர் பேபி கோபால், தொமுச முருகன், கமாலுதீன், மதிமுக வட்ட செயலாளர் மாரிச்சாமி, தொழிற்சங்கம் அகஸ்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போலீசார் அனுமதி மறுப்பு

ஜோதி ஓட்டம் மற்றும் புண்ணிய தீர்த்தத்தை பைக்கில் கொண்டு செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் போலீசாருடன் பேரணியாக சென்றவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஜோதி, தீர்த்தம் ஆகியவற்றை வேனிலும், மற்றவர்கள் கார்களிலும் செல்ல போலீசார் அனுமதி வழங்கினர். ஜோதி ஓட்டத்தையொட்டி மாநகர உதவி கமிஷனர் சதீஷ்குமார், பாளை இன்ஸ்பெக்டர் வாசிவம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post பாஞ்சாலங்குறிச்சி வீரசக்க தேவி ஆலய விழா பாளையில் இருந்து தொடர் ஜோதி ஓட்டம்-அப்துல்வஹாப் எம்எல்ஏ துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: