அறநிலையத்துறைக்கு சொந்தமான ₹23 கோடி மதிப்பு சொத்து மீட்பு

சென்னை, மே 13: சென்னை ராயப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோயிலுக்கு சொந்தமாக, ராயப்பேட்டை சீனிவாச பெருமாள் சன்னதி தெருவில் 2,550 சதுர அடி மனை உள்ளது. இதை ராமு, பக்தவச்சலம், பாபு, பாஸ்கர், கணேசன் ஆகியோர் வாடகைதாரர்களாக இல்லாமல், ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வந்தனர். அதேபோல், வானகரம் கைலாசநாதர் மற்றும் வைகுண்ட பெருமாள் கோயிலுக்கு சொந்தமான வானகரம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு ஏக்கர் நிலம் தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்தது. ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற சட்டப்பிரிவு 78-ன் படி சென்னை மண்டலம் – 2 இணை ஆணையரின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை மாவட்ட உதவி ஆணையர் பாஸ்கரன் காவல்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களின் உதவியுடன் மேற்படி மனை மற்றும் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டு கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட சொத்துகளின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ₹23 கோடி. ஆக்கிரமிப்புகளை அகற்றும் நிகழ்வின்போது வட்டாட்சியர் (ஆலய நிர்வாகம்) திருவேங்கடம், ஆய்வாளர் அறிவழகன், கோயில் செயல் அலுவலர்கள் முரளீதரன், கேசவராஜன் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

The post அறநிலையத்துறைக்கு சொந்தமான ₹23 கோடி மதிப்பு சொத்து மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: