ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழாவிற்காகவே மரத்தினால் ஆன தேர் புதிதாக செய்யப்படுகிறது. அந்த வகையில் அட்சயதிரிதி அன்று தொடங்கப்பட்ட தேர் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மரங்களில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் மேற்கொள்ளும் தச்சர்கள் சக்கரங்களை செலுத்தும் பணியிலும் கவனம் செலுத்துகின்றனர். 16 சக்கரங்களை கொண்ட தேரில் ஜெகன்நாதறும், 14 சக்கரங்களை கொண்ட தேரில் பாலபத்திரரும், 12 சக்கரங்களில் அமைக்கப்படும் தேரில் சுபத்ராவும் எழுந்தருள உள்ளனர்.
The post ஒடிசாவில் பூரி ஜெகன்நாதர் கோயில் திருவிழா: தேர்களை வடிவமைக்கும் பணி தீவிரம்..!! appeared first on Dinakaran.
