சூரக்குடியில் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

சிங்கம்புணரி, மே 12: சிங்கம்புணரி அருகே சூரக்குடியில் திராவிட மாடல் அரசின் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் கணேசன், பொதுகுழு உறுப்பினர் பெருமாள், ஒன்றிய அவைத் தலைவர் சின்னையா, மாவட்ட கவுன்சிலர் மதிவாணன், ஒன்றிய கவுன்சிலர் உதயசூரியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில மகளிர் தொண்டர் அணி இணைச் செயலாளர் தமிழரசி ரவிக்குமார் எம்எல்ஏ கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், ‘2 ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் எண்ணற்ற நலத்திட்டங்கள் மக்களுக்கு செய்யப்பட்டுள்ளன. பழமையால் மூடநம்பிக்கைகளால் அடக்கி வைக்கப்பட்டிருந்த பெண்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தி தந்தது திராவிட முன்னேற்றக் கழகம்’ என்றார். நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர் முத்துக்குமார், நகர அழைத்தலைவர் சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் அம்பலமுத்து, நகரச் செயலாளர் கதிர்வேல், ஒன்றிய பொருளாளர் தென்னரசு, நகரப் பொருளாளர் முத்துகிருஷ்ணன், நகரத் துணைச் செயலாளர் அலாவுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சூரக்குடியில் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: