கடலூர்: நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதாக என்.எல்.சி.தலைவர் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி தெரிவித்துள்ளார். கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; நிலம் கையகப்படுத்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக நிலம் கையகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாக கூறினார். தற்போது நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 5 யூனிட்டுகள் நிறுத்தப்பட்டு 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
80 ஹெக்டேர் நிலம் மட்டுமே தேவைப்படுவதாகவும் அந்த நிலம் இருந்தால் மின் உற்பத்தியை சீராக செய்யமுடியும் என்றும் அவர் கூறினார். 25,000 என்.எல்.சி. தொழிலாளர்களில் 18,000 ஒப்பந்த தொழிலார்களாக உள்ளதாகவும், இதில் 95% பேர் தமிழர்கள் என்றும் பிரசன்ன குமார் தெரிவித்தார். நிரந்தர தொழிலாளர்களின் 83% பேர் தமிழர்கள் என்று அவர் கூறியுள்ளார்.
15 ஆண்டுகளுக்கு முன்னதாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கூடுதலாக ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு வருவதாகவும் பிரசன்னா குமார் மோட்டுப்பள்ளி தெரிவித்துள்ளார். என்.எல்.சி. நிறுவனத்தால் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.2.30 காசுகளுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், இதை வெளிச்சந்தையில் வாங்கினால் ரூ.10 முதல் ரூ.12 வரை ஒரு யூனிட்டுக்கு வழங்கவேண்டி இருக்கும் என்றும் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி தெரிவித்தார்.
The post நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு: என்.எல்.சி. தலைவர் பேட்டி appeared first on Dinakaran.
