ஹேமந்த் சோரனுடன் நிதிஷ், தேஜஸ்வி சந்திப்பு

ராஞ்சி: கடந்த ஆண்டு தேஜ கூட்டணியில் இருந்து வெளியேறிய பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் வரும் மக்களவைத் தேர்தலில் பாஜவை தோற்கடிப்பேன் என்று கூறினார். இதற்காக எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை நேற்றுமுன்தினம் நிதிஷ் சந்தித்தார். இதற்கு முன் டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரை சந்தித்தார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் ஆகியோருடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்நிலையில்,நிதிஷ் குமார்,துணை முதல்வர் தேஜஸ்வி ஆகியோர் நேற்று ஜார்க்கண்ட் முதல்வரும் ஜேஎம்எம் கட்சி தலைவருமான ஹேமந்த் சோரனை நேற்று சந்தித்து பேசினர். மக்களவை தேர்தலில் பாஜ கூட்டணியில் இல்லாத கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக இந்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

The post ஹேமந்த் சோரனுடன் நிதிஷ், தேஜஸ்வி சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: