நெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே டயர் வெடித்து முட்டை லோடு ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்து விழுந்ததில் 30,000 முட்டைகள் உடைந்து மழை நீர் போன்று சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளுக்கு விநியோகம் செய்வதற்காக முட்டைகளை ஏற்றி கொண்டு மினி லாரி ஒன்று புறப்பட்டது, இந்த மினி லாரியை காங்கியம் பகுதியை சேர்ந்த சிதம்பரம் ஒட்டி வந்தார், இன்று நண்பகல் வேளையில் வள்ளியூர் பகுதியில் மினி லாரி வந்துகொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக மினி லாரியின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.
இச்சம்பவத்தில் மினி லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 30,000 முட்டைகள் உடைந்தது, இதனால் சாலை பகுதி முழுவதும் முட்டையினுடைய மஞ்சள் கரு மற்றும் வெள்ளை கரு ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனை அந்த சுற்று பகுதியில் இருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்த்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து வள்ளியூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மினி லாரி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து மினி லாரி ஓட்டுநர் சிதம்பரம் படுகாயம் அடைந்துள்ளார். அவர் மேல்சிகிச்சைக்காக பணங்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
The post நெல்லை அருகே டயர் வெடித்து முட்டை லோடு ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்து விழுந்ததில் 30,000 முட்டைகள் சேதம் appeared first on Dinakaran.
