தேசிய சித்த மருத்துவமனை பொதுக்குழு கூட்டம்

தாம்பரம்: தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் மத்திய சித்த மருத்துவ ஆய்வு குழுமம் ஆகிய இரண்டிற்கான பொதுக்குழு மற்றும் நிர்வாகக் குழு கூட்டங்கள் தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் நேற்று நடந்தது. ஆயுஷ் அமைச்சக செயலர் ராஜேஷ் கோடேசா தலைமை வகித்தார். சிறப்பு செயலர் பிரமோத் குமார் பாடக், ஒன்றிய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கூடுதல் செயலர் மற்றும் நிதி ஆலோசகர், தமிழக அரசின் சுகாதார துறை செயலர் போன்ற உயர் அதிகாரிகள், உயர் பொறுப்பு வகிக்கும் சித்த மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், அவற்றின் தலைமைப் பொறுப்பில் சித்த மருத்துவ நிறுவன இயக்குநர் மீனாகுமாரி இரண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள், சாதனைகள், வளர்ச்சிகள் பற்றி விரிவாக விளக்கினார். பின்னர் இரு நிறுவனங்களுக்கும் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், வளர்ச்சி, கட்டமைப்பு வசதிகள், சித்த மருத்துவ ஆராய்ச்சிகள் குறித்த விவாதங்கள், சித்த மருத்துவத்தை எல்லை தாண்டி பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகள் தோறும் பயன் பெறுவதற்கான பல திட்ட முன்வடிவங்கள் எடுக்கப்பட்டன.

The post தேசிய சித்த மருத்துவமனை பொதுக்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: